Anbulla Maan Vizhiye Asayil orkaditham Song Lyrics - Kuzhanthaiyum Dheivamum Lyrics


Anbulla maanvizhiyae
aasaiyil oar kadidham - naan
ezudhuvadhennaventraal  - uyirk
kaadhalil oar kavidhai

anbulla mannavane
Asaiyil oar kadidham - adhaik
kaigalil ezhudhavillai  - iru
kangalil ezudhi vanthen

nalam nalamthaanaa mullai malarae
sugam sugamthaana muththu sudare
ilaiya kanniyin idai melinthadho
eduththa eduppile nadai thaLarnthadho
vannap poongkodi vadivam koNdadho
vaadaik kaatrile vaadi nintradho

(anbulla)

nalam nalamthaanae nee irunthaal
sugam sugamthaanae ninaivirunthaal
idai melinthadhu iyarkaiyallavaa
nadai thaLarnthadhu naanam allavaa
vannap poongkodi penmai allavaa
vaazha vaiththadhum unmai allavaa

(anbulla)

_______________________________________

அன்புள்ள  மான்விழியே 
ஆசையில்  ஓர்  கடிதம்  - நான் 
எழுதுவதென்னவென்றால்   - உயிர்க் 
காதலில்  ஓர்   கவிதை 

அன்புள்ள  மன்னவனே 
ஆசையில்  ஓர்  கடிதம்  - அதைக் 
கைகளில்  எழுதவில்லை   - இரு 
கண்களில்  எழுதி  வந்தேன் 

நலம்  நலம்தானா  முல்லை  மலரே 
சுகம்  சுகம்தானா  முத்து  சுடரே 
இளைய  கன்னியின்  இடை  மெலிந்ததோ 
எடுத்த  எடுப்பிலே  நடை  தளர்ந்ததோ 
வண்ணப்  பூங்கொடி  வடிவம்  கொண்டதோ 
வாடைக்  காற்றிலே  வாடி  நின்றதோ 

(அன்புள்ள )

நலம்  நலம்தானே  நீ  இருந்தால் 
சுகம்  சுகம் தானே  நினைவிருந்தால் 
இடை  மெலிந்து  இயற்கையல்லவா 
நடை  தளர்ந்து  நாணம்  அல்லவா 
வண்ணப்  பூங்கொடி  பெண்மை  அல்லவா
வாழ   வைத்ததும்  உண்மை  அல்லவா 

(அன்புள்ள )

0 comments:

Post a Comment